Yarl Geek Challenge Junior
Technology & Innovation Competition for School Students in the Northern Province of Sri Lanka
யாழ் கீக் சாலஞ்ச் ஜூனியர்
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி
About YGC Junior
YGC Junior பற்றி
Technology & Innovation Competition for School Students in the Northern Province of Sri Lanka organised by Yarl IT Hub in partnership with the Provincial Department of Education, Northern Province.
வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub அமைப்பினால் வடமாகாண பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டியே YGC Junior ஆகும்.
This year’s competition includes two main categories: Digital Technology Solution and Non-Digital Solution, where students must identify real-world problems and develop innovative solutions using digital technologies or non-digital approaches. In addition, a Creative Expression & Craft Showcase is available as a non-competitive platform for students to present artistic and craft-based creations.
இந்த ஆண்டின் போட்டி இரண்டு முக்கியப் பிரிவுகளை உள்ளடக்குகிறது: டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வு மற்றும் டிஜிட்டல் அல்லாத தொழில்நுட்பத் தீர்வு. இதில் மாணவர்கள் வாழ்வியல் பிரச்சினைகளை இனங்கண்டு, டிஜிட்டல் அல்லது டிஜிட்டல் அல்லாத அணுகுமுறைகளின் மூலம் புத்தாக்கமான தீர்வுகளை உருவாக்க வேண்டும். இதனுடன், கலை மற்றும் கைவினைத்திறன் வெளிப்பாட்டு தளம் என்ற போட்டியற்ற மேடையும் மாணவர்களின் கலை மற்றும் கைவினை ஆக்கங்களை காட்சிப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.
Select the Category That Matches Your Idea
Students can select a category based on their idea — digital innovation, non-digital solutions, or creative expression.
உங்கள் யோசனைக்கு பொருத்தமான போட்டிப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்
மாணவர்கள் தங்கள் யோசனையின் அடிப்படையில் ஒரு போட்டிப் பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் — டிஜிட்டல் புத்தாக்கம், டிஜிட்டல் அல்லாத தீர்வுகள் அல்லது கலை மற்றும் ஆக்கபூர்வ வெளிப்பாடு.
Digital Technology Solution
Identify a real-world problem and develop a solution where the core component is digital technology. This may include software applications, mobile or web platforms, AI-enabled tools, IoT systems, robotics solutions, or data-driven innovations designed to solve practical challenges.
Non-Digital Solution
Identify a real-world problem and design a solution where the main innovation is not digital. This can include mechanical innovations, physical models, scientific or engineering solutions. Digital tools may assist the implementation, but the core solution must not depend on digital technology.
Creative Expression & Craft
A non-competitive platform that celebrates creativity, craftsmanship, and artistic expression. Students can showcase crafts, artistic creations, design works, or creative artefacts. Up to 10 participants per zone will be selected to exhibit their work at the District Level.
டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வு
ஒரு உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு, அதன் முக்கிய கூறாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வை உருவாக்க வேண்டும். இதில் மென்பொருள் செயலிகள், மொபைல் அல்லது இணைய தளங்கள், AI கருவிகள், IoT அமைப்புகள், ரோபோட்டிக்ஸ் தீர்வுகள் அல்லது தரவின் அடிப்படையிலான புத்தாக்கங்கள் அடங்கலாம்.
டிஜிட்டல் அல்லாத தீர்வு
ஒரு உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு, அதன் முக்கிய புதுமை டிஜிட்டல் அல்லாததாக இருக்கும் வகையில் தீர்வை வடிவமைக்க வேண்டும். இது இயந்திரவியல் கண்டுபிடிப்புகள், பெளதீக மாதிரிகள், அறிவியல் அல்லது பொறியியல் தீர்வுகளை உள்ளடக்கலாம். டிஜிட்டல் கருவிகள் துணையாக பயன்படுத்தப்படலாம், ஆனால் முக்கிய தீர்வு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கக் கூடாது.
கலை & கைவினைத்திறன் வெளிப்பாடு
இது போட்டியற்ற தளமாகும்; இது மாணவர்களின் ஆக்கபூர்வத் திறனை, கைவினைத்திறனை மற்றும் கலை வெளிப்பாட்டை கொண்டாடுகிறது. மாணவர்கள் கைவினைப் பொருட்கள், கலைப்படைப்புகள், வடிவமைப்பு வேலைகள் அல்லது பிற ஆக்கபூர்வ படைப்புகளை காட்சிப்படுத்தலாம். ஒவ்வொரு வலயத்திலிருந்தும் அதிகபட்சம் 10 பேர் மாவட்ட மட்டத்தில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த தெரிவுசெய்யப்படுவர்.
YGC Junior Impact
Inspiring the next generation of innovators
YGC Junior Journey
From Application to the Innovation Festival
01 Application
Students submit their applications through the official online portal and select the appropriate competition category.
02 Zonal Workshops
Participants attend workshops in their zones to learn about problem identification, innovation, and project development.
03 Build Phase
Teams develop their solutions by building prototypes, testing ideas, and preparing their demonstrations.
04 Zonal Evaluation
Teams present their projects with a 4-minute demonstration and a 2-minute Q&A session with the evaluators.
05 District Evaluation
Shortlisted teams from the zones compete at the district level across Jaffna, Kilinochchi, Mannar, Mullaitivu, and Vavuniya.
06 Mentoring & Provincial Finals
Selected teams receive expert mentoring and compete at the Northern Provincial Finals for final evaluation.
07 Innovation Festival Showcase
Top teams from the provincial level will be invited to showcase their innovations at the YGC Innovation Festival.
01 விண்ணப்பித்தல்
மாணவர்கள் உத்தியோகபூர்வ ஆன்லைன் தளத்தின் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, பொருத்தமான போட்டிப் பிரிவைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
02 வலயப் பயிற்சிப் பட்டறைகள்
பங்கேற்பாளர்கள் தங்களது வலயங்களில் நடைபெறும் பட்டறைகளில் கலந்து கொண்டு பிரச்சினை இனங்காணல், புத்தாக்கம், மற்றும் செயற்றிட்ட அபிவிருத்தி பற்றி கற்றுக்கொள்கிறார்கள்.
03 அபிவிருத்திக் கட்டம்
அணிகள் தங்கள் தீர்வுகளை மாதிரியாக உருவாக்கி, யோசனைகளைச் சோதித்து, விளக்கக்காட்சிக்குத் தயாராகின்றனர்.
04 வலய மட்ட மதிப்பீடு
அணிகள் தங்கள் செயற்றிட்டங்களை 4 நிமிட விளக்கக்காட்சியுடனும் 2 நிமிட கேள்வி-பதில் அமர்வுடனும் நடுவர்களிடம் வழங்குகின்றனர்.
05 மாவட்ட மட்ட மதிப்பீடு
வலய மட்டத்தில் தெரிவான அணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மற்றும் வவுனியா மாவட்ட மட்டங்களில் போட்டியிடுகின்றன.
06 வழிப்படுத்தல் மற்றும் மாகாண மட்டம்
தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டலைப் பெற்று வடமாகாண இறுதிப்போட்டியில் பங்குபெற்று இறுதி மதிப்பீட்டில் கலந்துகொள்கின்றன.
07 புத்தாக்கத் திருவிழா காட்சிப்படுத்தல்
மாகாண மட்டத்தில் தெரிவான சிறந்த அணிகள் YGC புத்தாக்கத் திருவிழாவில் தங்கள் புத்தாக்கங்களை காட்சிப்படுத்த அழைக்கப்படுவார்கள்.
What Students Gain
More than just a competition
Hands-On Experience
Go beyong classroom knowledge and implement real-world projects and challenges
Teamwork Skills
Learn to collaborate, communicate, and work effectively in teams
Creative Problem Solving
Develop innovative solutions to real challenges using technology
Technical Skills
Build practical skills in software, robotics, or applied science
Mentorship
Get guidance from industry professionals and experienced mentors
Recognition
Showcase your talents and gain recognition for your achievements
Got Questions?
Find answers to common questions about YGC Junior
What is YGC Junior?
YGC Junior is a technology and innovation competition organized by Yarl IT Hub in partnership with the Provincial Department of Education, Northern Province. It encourages school students to identify real-world problems and develop innovative solutions.
Who can participate in YGC Junior?
The competition is open to school students under 19 years of age as of 1st January 2026 who are currently enrolled in a recognized school in the Northern Province of Sri Lanka.
Can students participate individually or in teams?
Students may participate individually or form teams of up to three members. All members must be from the same school, and each student may participate in only one category and one team.
What competition categories are available?
The competition includes two competitive categories: Digital Technology Solution and Non-Digital Solution. In addition, a Creative Expression & Craft platform allows students to showcase artistic and craft-based work in a non-competitive format.
What kind of problems should students solve?
Students are encouraged to identify real-world problems affecting their communities, schools, environment, or everyday life and design practical and innovative solutions to address those challenges.
Can digital tools be used in the Non-Digital Solution category?
Yes. Digital tools may be used as supporting elements. However, the main solution must not depend on digital technology and the core innovation should be a non-digital system or physical solution.
How will projects be evaluated?
Projects will be evaluated based on innovation, originality, applicability to the problem, completeness of the solution, and the usability or practicality of the project.
What presentation format is required during evaluations?
During Zonal evaluations, each team will receive 4 minutes to demonstrate their project and pitch the idea, followed by a 2-minute Q&A session with the evaluators.
How does the competition progress?
The competition progresses through three levels: Zonal Level → District Level → Provincial Level. The best teams from each stage advance to the next level.
What happens after the Provincial Level?
The top teams from the Provincial Level will be invited to showcase their innovations at the YGC Innovation Festival.
Is the Creative Expression & Craft category a competition?
No. The Creative Expression & Craft category is a showcase platform designed to celebrate creativity and craftsmanship. Selected exhibits will be showcased at the District Level.
YGC Junior என்றால் என்ன?
YGC Junior என்பது வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub அமைப்பினால் நடத்தப்படும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கப் போட்டியாகும். இது பாடசாலை மாணவர்கள் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு புத்தாக்கமான தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கிறது.
யார் இதில் பங்குபற்றலாம்?
2026 ஜனவரி 1 ஆம் திகதியன்று 19 வயதிற்கு உட்பட்டதும், வடமாகாண அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் இதில் பங்குபற்றலாம்.
மாணவர்கள் தனியாகவா அல்லது குழுவாகவா பங்குபற்றலாம்?
மாணவர்கள் தனிப்பட்டவர்களாகவோ அல்லது அதிகபட்சம் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகவோ பங்குபற்றலாம். குழுவில் உள்ள அனைவரும் ஒரே பாடசாலையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் ஒரு பிரிவிலும் ஒரு குழுவிலும் மட்டுமே பங்குபற்ற முடியும்.
எந்தெந்த போட்டிப் பிரிவுகள் உள்ளன?
போட்டியில் இரண்டு முக்கிய போட்டிப் பிரிவுகள் உள்ளன: டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வு மற்றும் டிஜிட்டல் அல்லாத தொழில்நுட்பத் தீர்வு. இதனுடன் கலை மற்றும் கைவினைத்திறன் காட்சிப்படுத்தல் என்ற போட்டியற்ற தளமும் உள்ளது.
மாணவர்கள் எந்த வகை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்?
மாணவர்கள் தங்கள் சமூகங்கள், பாடசாலைகள், சூழல், அல்லது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு நடைமுறைக்கு ஏற்ற புத்தாக்கமான தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
டிஜிட்டல் அல்லாத பிரிவில் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தலாமா?
ஆம். டிஜிட்டல் கருவிகள் துணையாக பயன்படுத்தலாம். ஆனால் தீர்வின் மையம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கக் கூடாது.
செயற்றிட்டங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்?
செயற்றிட்டங்கள் புத்தாக்கம், அசல் தன்மை, பயன்பாடு, முழுமை மற்றும் நடைமுறைப் பயன்பாடு ஆகிய அடிப்படைகளில் மதிப்பீடு செய்யப்படும்.
மதிப்பீட்டின் போது எவ்வளவு நேரம் வழங்கப்படும்?
வலய மட்ட மதிப்பீட்டின் போது ஒவ்வொரு அணிக்கும் 4 நிமிட விளக்கக்காட்சி மற்றும் 2 நிமிட கேள்வி-பதில் நேரம் வழங்கப்படும்.
போட்டி எவ்வாறு முன்னேறும்?
போட்டி வலய மட்டம் → மாவட்ட மட்டம் → மாகாண மட்டம் என மூன்று நிலைகளில் நடைபெறும்.
மாகாண மட்டத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?
மாகாண மட்டத்தில் தெரிவான சிறந்த அணிகள் YGC புத்தாக்கத் திருவிழாவில் தங்கள் புத்தாக்கங்களை காட்சிப்படுத்த அழைக்கப்படுவார்கள்.
கலை மற்றும் கைவினைத்திறன் பிரிவு போட்டியா?
இல்லை. இது மாணவர்களின் கலை மற்றும் கைவினை ஆக்கங்களை காட்சிப்படுத்தும் போட்டியற்ற தளமாகும்.