Yarl Geek Challenge
Season 13 – Junior
Yarl Geek Challenge Junior - அறிமுகம்
Yarl Geek Challenge Junior is a school level IT competition organized by Yarl IT Hub to encourage school children to use their creativity and create IT solutions
Yarl Geek Challenge Junior என்பது பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் ஒரு போட்டியாகும்.
இப்போட்டி வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து வடமாகாணம் முழுவதிற்குமாக நடாத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் மாணவர்கள் தனியாகவோ அல்லது அதிகபட்சமாக மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவாகவோ பங்குகொள்ளலாம். குழுவாகப் பங்குகேற்பது வரவேற்கத்தக்கது.
போட்டிப் பிரிவுகள்
Web Application Development.
மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை Web application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்
Mobile application development.
மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை ஏதாவது ஒரு இயங்குதளத்திற்கு Mobile application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்
Hardware application development.
மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை Hardware application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்
Application of Science.
மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை விஞ்ஞானத்தின் பிரயோகம் மூலமான தயாரிப்பு ஒன்றாக முன்வைக்கலாம்